LOADING

Type to search

சினிமா

“ஜென்டில்வுமன்” படத்தின் முதல் பாடல் வெளியீடு

Share

அறிமுக இயக்குநர் ஜோசுவா சேதுராமன் இயக்கத்தில் ஜென்டில்வுமன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. கோமலாஹரி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் லிஜோமோல், ஹரிகிருஷ்ணனுடன் லாஸ்லியாவும் நடிக்கிறார். கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஜெய்பீம் படத்தில் அசத்திய லிஜோமோல் ஜோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெட்ராஸ், காலா, நட்சத்திரம் நகர்கிறது படத்தில் நடித்து கவனம் ஈர்த்த ஹரிகிருஷ்ணன் இதில் நடித்துள்ளார். ஜென்டில்வுமன் படத்தின் முதல்காட்சி பதாகையில் “ஆண்களுக்கு மட்டும்தான் ஜென்டில் என்று சொல்ல வேண்டுமா? வலிமை, பொலிவினை புது அர்த்தம் தெரிவிக்க ஜெண்டில்வுமன் வந்திருக்கிறாள்” என படக்குழு குறிப்பிட்டிருந்தது. “ஜென்டில்வுமன்” படம் மார்ச் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. இத்திரைப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் “ஜென்டில்வுமன்” திரைப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘சுளுந்தீ’ எனத் தொடங்கும் இப்பாடலை யுகபாரதி எழுத்தில் ரேஷ்மி சதீஷ் பாடியுள்ளார்.