LOADING

Type to search

சினிமா

சசிகுமார் நடிக்கும் “டூரிஸ்ட் பேமிலி” படத்தின் பாடல் வெளியானது

Share

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயோத்தி, கருடன், நந்தன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து தற்போது சசிகுமார் ‘டூரிஸ்ட் பேமலி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘குட் நைட்’ படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சசிகுமாருடன் நடிகை சிம்ரன் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் முதல்காட்சி பதாகை வெளியாகி வைரலானது. இந்த படத்தின் முன்னோட்டத்தில் சசிகுமார் – சிம்ரன் பேசும் இலங்கை தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் முதல் பாடலான ‘முகை மழை’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை மோகன் ராஜன் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் சைந்தவி இணைந்து பாடியுள்ளனர். படத்தின் பின்னணி வேலைகள் தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.