LOADING

Type to search

இந்திய அரசியல்

அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தும் நிதிஷ் குமார் கட்சி

Share

மக்களை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணியாக 290 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது. சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் உதவி பா.ஜனவுக்கு தேவைப்படுகிறது.

இதனால் அமைச்சரவையில் சமரசம் செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. அதையும் தாண்டி சில விசயங்களை செய்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் விரும்புகின்றன. அமைச்சரவையில் இடம், இரு மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து பிரதான கோரிக்கைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பார்வை வேறு பக்கம் உள்ளது. அந்த கட்சி அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது. கடந்த முறை பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்ததால் இந்தியாவின் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் 2022-ல் ராணுவ வீரர்கள் தொடர்பாக அக்னிபாத் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நான்கு வருட வேலை என்ற அடிப்படையில் அவர்கள் நியமனம் செய்யப்படுவர். அதன்பின் 15 வருடத்திற்கு நிரந்தர கமிஷன் என்ற அடிப்பயைடில் 25 சதவீத சம்பளம் வழங்கப்படும். இதனால் பென்சன் வழங்கும் தொகை மிச்சமாகும் என பாஜக அரசு எண்ணியது. இதற்கு பீகார் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இளைஞர்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். ரெயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த திட்டத்தால் வருகின்றன பீகார் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என ஐக்கிய ஜனதா தளம் நினைக்கிறது. இதனால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விரும்புகிறது. இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் கேசி தியாகி கூறுகையில் “அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது அவசியம். இந்த திட்டத்திற்கு ஏராளமான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் தாக்கம் தேர்தலில் பார்க்க முடிந்தது. நாங்கள் இதை வலியுறுத்தமாட்டோம். அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினர் மத்தியில் அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின்போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்றார்.