LOADING

Type to search

உலக அரசியல்

கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. டொனால்டு டிரம்ப்

Share

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது.

அதிபர் தேர்தலைப் பொருத்தவரை பெரும்பாலான மாநிலங்கள் இந்த இரு பிரதான கட்சிகளில் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலையிலேயே உள்ளன. சில மாநிலங்களில் மட்டுமே இழுபறி நிலவும். இந்த மாநிலங்களில் வேட்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். இந்த மாநிலங்களே பெரும்பாலும் வெற்றியைத் தீர்மானிப்பதால் ‘போர்க்கள’ மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த அவ்வகையில் இந்த ஆண்டு அதிபர் தேர்தலைத் தீர்மானிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் 7 மாநிலங்களில் பென்சில்வேனியா மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நெவாடாவிலும் கடும் போட்டி இருக்கும். இந்த மாநிலங்களில் வாக்காளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வேட்பாளர்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வகையில், பென்சில்வேனியாவில் பிரசாரம் செய்த டிரம்ப், அமெரிக்காவில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், காவல்துறை கடுமையான அடக்குமுறையை கையில் எடுத்து குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் ஜோ பைடனைப் போன்று கமலா ஹாரிசும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் டிரம்ப் விமர்சனம் செய்தார்.