யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியில் பெருமளவிலான நிலங்கள் சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது என்று தொடர்ச்சியாக வரும் கவலைகளிற்கு மத்தியில், சீனாவின் தொலைக்காட்சி ஒளிபரப்பும் இலங்கையில் சோதனை முறையில் தொடங்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஓரிரு நாட்களாக வடக்கு மாகாணத்தில் பலர் தமது தொலைக்காட்சிப் ...
குரங்குகளினால் விவசாயத்தில் ஏற்பட்டுவரும் பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு இலங்கையிலிருந்து ஒரு இலட்சம் செங்குரங்குகளைச் சீனாவின் மிருகக்காட்சிச் சாலைகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்ததையடுத்துப் பலத்த வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, கொழும்பு சீனத்தூதுவராலயம் இவ்வாறானதொரு கோரிக்கையைத் தாம் முன்வைக்கவில்லையெனத் தற்போது அறிவித்துள்ளது. சீனாவின் தனியார் விலங்குப் பண்ணையொன்றின் எழுத்துமூல ...
(மன்னார் நிருபர்) (20-04-2023) மன்னார் மாவட்டச் செயலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இன நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இப்தார் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தலைமையில் இன்று வியாழக்கிழமை (20) மாலை மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்டச் செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ...