12 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் – நாசா தகவல்
Share
எக்ஸ்ரே கருவியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நிக் ஹேக் ஆகியோர் ஜன.,19ம் தேதி விண்வெளியில் நடக்கவிருக்கின்றனர். சுனிதா 12 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் நடைபோடுகிறார். ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். அவர்கள் விரைவில் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து, அமெரிக்கா விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எக்ஸ்ரே கருவியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய நாசா வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் நிக் ஹேக் ஆகியோர் ஜன.,19ம் தேதி விண்வெளியில் நடக்க விருக்கின்றனர். சுனிதா 12 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளியில் நடைபோடுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே, ‘ஸ்டார்லைனரில் ஆட்களை அழைத்து வருவது அச்சுறுத்தல் நிறைந்தது என்பதால், சுனிதாவும், புட்ச் வில்மோரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலம் மூலம் வரும் மார்ச்சில் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.